சென்னை எண்ணூரில் ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் அவதி
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரெயில்கள் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் மார்க்கத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர்- அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் ரெயில்கள் எண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
#train service #Passengers suffer #Tamilpublicnews






Comments