சென்னை–பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவையை தொடங்க உள்ளது
- tamil public
- Dec 20, 2024
- 1 min read
நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை-பினாங்கு தீவு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள்.

மலேசியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பினாங்கு தீவுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என பல மாதங்களாக பயணிகள் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது நாளை முதல், அதாவது டிசம்பர் 21 முதல், நேரடி விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் இருந்து நேரடி விமான சேவை இருந்து வரும் நிலையில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்றான பினாங்கு தீவுக்கு நேரடி விமானம் இயக்க வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
பினாங்கு தீவில் வாழ்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதால், சென்னையில் இருந்து நேரடி விமானம் இயக்கப்பட வேண்டிய அவசியத்தையும் பயணிகள் குறிப்பிட்டு வந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவையை தொடங்க இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதை அடுத்து, நாளை முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ், சென்னை–பினாங்கு தீவுக்கு நேரடி விமான சேவையை இயக்க உள்ளது.
சென்னை மற்றும் பினாங்கு தீவு இடையிலான பயண தூரம் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#Chennai- Penang Air Service #Tamilpublicnews
Comments