சென்னை- முக்கிய நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 10 ஆயிரம் சிறப்பு பஸ்கள்
- tamil public
- Dec 10, 2024
- 1 min read
சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது

Special Busses Thiruvanamalai கார்த்திகை தீபம் மற்றும் பவுர்ணமியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
கார்த்திகை தீபம் 12-ந்தேதியும் பவுர்ணமி 14-ந்தேதியும் கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 4 நாட்கள் இயக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1982 பஸ்களும், சேலம், வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, கும்பகோணம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற இடங்களில் இருந்து 8127 பஸ்களும் என மொத்தம் 10,109 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 12-ந் தேதி 269, 13-ந்தேதி 643, 14-ந்தேதி 801, 15-ந்தேதி 269 பஸ்கள் திருவண்ணாமலைக்கு விடப்பட்டு உள்ளது.
தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு மற்றும் tnstcofficial app. ஆகிய இணைய தளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பஸ் வசதியினை பயன்படுத்தி கொள்ளும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
#Special Busses #Thiruvanamalai






Comments