top of page

சென்னை வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை அடுத்த மார்ச்சில் தொடக்கம்?

  • 2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது

  • பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.

Chennai     Flying train
Chennai Flying train
  • வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் விரிவாக்க திட்டம் 2008-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2025, மார்ச் முதல் இந்த தடத்தில் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2008 ஆம் ஆண்டு 495 கோடி ருபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்தின் செலவு தற்போது ரூ.734 கோடியாக உயர்ந்துள்ளது. பறக்கும் ரெயில் சேவையானது தற்போது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படுகிறது.

  • இந்நிலையத்தில் விரிவாக்க திட்டம் நிலம் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை காரணமாக இடையில் முடங்கியது. நீதிமன்ற தலையீட்டின்பின் 2022 இல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேம்பாலம் இணைப்பு பணிகள் முடிந்து ரெயில் பாதை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

  • இந்நிலையில் இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் மார்ச் 2025 மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சேவை தொடங்கும்பட்சத்தில் சென்னையில் சுமார் 5 லட்சம் மக்கள் பயனடைவர் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும்.

    #Chennai #Flying train #Tamilpublicnews

Comments


bottom of page