top of page

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் கேப்டனாக ரோகித்துக்கு பதில் ஹர்திக் பாண்ட்யா?

  • ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார்.

  • தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பால் ரோகித், பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

Champhion trophy 2025    Rohit sharma  Hardik pandya
Champhion trophy 2025 Rohit sharma Hardik pandya
  • பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ளது. இந்த தொடர் ஹைபிரிட் மாடலாக நடத்த உள்ளதாக ஐசிசி அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது. அதன்படி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படும். இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது எனவும் துபாயில் நடைபெறும் எனவும் ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது.

  • 8 அணிகள் பங்கேற்கும் இதில் பங்கேற்கின்றனர். இவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம் பெற்றுள்ளன.

  • இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. ரோகித் சர்மாவை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்க பிசிசிஐ ஆலோசனை நடந்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • ரோகித் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் ஓய்வை அறிவித்தார். தற்போது டெஸ்ட்டில் மோசமான பேட்டிங் மற்றும் கேப்டஷிப்பால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் விளையாடவே இல்லை.

  • அவர் டெஸ்ட்டிலும் ஓய்வு அறிவிக்க போகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் பிசிசிஐ அடுத்த ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனை நியமிக்க ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

    #Champhion trophy 2025 #Rohit sharma #Hardik pandya #Tamilpublicnews

Comments


bottom of page