ஜே.இ.இ. முதன்மை தேர்வு 22-ந்தேதி தொடக்கம்- கால அட்டவணை வெளியீடு
- tamil public
- Jan 3
- 1 min read
எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

சென்னை:
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜே.இ.இ.) தேர்ச்சி பெற வேண்டும். இது ஜே.இ.இ. முதன்மை தேர்வு. பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது.
இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. முதல் கட்ட முதன்மை தேர்வு 22-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபர் 28-ந்தேதி தொடங்கி நவம்பர் 22-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்.டி.ஏ. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பி.இ., பி.டெக். படிப்புக்கான முதல் தாள் தேர்வு 22, 23, 24, 28, 29-ந்தேதிகளில் காலை, மாலை என இரு வேளையாக நடத்தப்படும். அதேபோல், பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2-ம் தாள் தேர்வு 30-ந்தேதி மாலை நடைபெற உள்ளது.
இதுபற்றிய விவரங்களை இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ந்தேதி வெளியிடப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இது குறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்.டி.ஏ. வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#JEE Exam #Result announcement #Tamilpublicnews






Comments