top of page

டோனியை போல நோ-லுக் ரன் அவுட் ஜூனியர் ஆசிய கோப்பையில் கவனம் ஈர்த்த ஹர்வன்ஷ் சிங்

  • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  • இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது

Junior Asia Cup   MK Stalin
Junior Asia Cup MK Stalin
  • 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

  • இதில் இந்திய அணி தனது 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற யு.ஏ.இ. பேட்டிங் தேர்வு செய்தது.

  • அதன்படி முதலில் ஆடிய ஐக்கிய அரபு அமீரகம் 44 ஓவரில் 137 ரன்களுக்கு சுருண்டு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 138 என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 16.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.

  • இப்போட்டியில் ஐக்கிய அரபு அமீரக வீரர் அடித்த பந்தை பவுண்டை லைனில் தடுத்த இந்திய வீரர்கள் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கிடம் பந்தை வீசினர். அந்த பந்தை பிடித்த ஹர்வன்ஷ் சிங் திரும்பி பார்க்காமலேயே எம்எஸ்தோனியை போல ஸ்டம்பை தாக்கி ரன் அவுட் செய்ய முயற்சித்தார்.

  • ஆனால் அதற்கு ஐக்கிய அரபு அமீரக வீரர் கிரீசுக்குள் வந்துவிட்டதால் ரன் அவுட் இல்லாமல் போனது. ஆனால் டோனியை போல நோ-லுக் ரன் அவுட்டை முயற்சித்த இளம் விக்கெட் கீப்பர் ஹர்வன்ஷ் சிங்கை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

#Junior Asia Cup #MK Stalin


.

Comments


bottom of page