டெல்லி அசோக் விகார் பகுதியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
- tamil public
- Jan 3
- 1 min read
சரோஜினி நகரில் உள்ள குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது ஆகும்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

புதுடெல்லி:
டெல்லி அசோக் விகாரில் ஸ்வாபிமான் அடுக்கு மாடி குடியிருப்பில் குடிசைப்பகுதி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு சாவிகளை வழங்கினார்.
டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் 2-வது குடிசைப்பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் நிறைவு இதுவாகும். சரியான வசதிகளுடன் கூடிய சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
டெல்லி நவுரோஜி நகரில் அமைக்கப்பட்டு உள்ள உலக வர்த்தக மையம் மற்றும் சரோஜினி நகரில் 2,500 வீடுகள் கொண்ட பொதுத்தொகுப்பு குடியிருப்புகளை தொடங்கி வைத்தார். சரோஜினி நகரில் உள்ள குடியிருப்புகள் 28 உயரடுக்கு கோபுரங்களை உள்ளடக்கியது ஆகும்.
டெல்லி துவாரகாவில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டுள்ள சி.பி.எஸ்.இ-யின் ஒருங்கிணைந்த அலுவலக வளாகத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் ரூ.600 கோடி மதிப்பில் 3 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
கிழக்கு டெல்லியில் உள்ள சூரஜ்மல் விகாரின் கிழக்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகம் துவாரகாவில் உள்ள மேற்கு வளாகத்தில் ஒரு கல்வி வளாகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். நஜாப்கரின் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
#PM Modi #Tamilpublicnews






Comments