top of page

டெஸ்ட் பேட்டர் தரவரிசை ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஹாரி புரூக்

  • டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

  • டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

ICC Test Ranking   Harry brook   Joc Root
ICC Test Ranking Harry brook Joc Root
  • ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது. அதன்படி டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து வீரர் ஜோரூட்டை (897) பின்னுக்கு தள்ளி சக நாட்டவர் ஹாரி புரூக் (898) முதல் இடம் பிடித்துள்ளார். இருவருக்கும் 1 புள்ளிகள் மட்டும் வித்தியாசம் ஆகும்.

  • ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 6 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

  • டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் ரிஷப் பண்ட் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர். ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும் ரிஷப் பண்ட் 3 இடங்கள் பின் தங்கி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

  • விராட் கோலி 6 இடங்கள் பின் தங்கி 20-வது இடத்திலும் ரோகித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 31-வது இடத்திலும் உள்ளனர்.

  • டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பெரும் அளவில் மாற்றம் இல்லை. பும்ரா முதல் இடத்தில் தொடர்கிறார். இந்திய வீரர் அஸ்வின் ஒரு இடம் பின் தங்கி 5-வது இடத்தையும் ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ஒரு இடம் முன்னேறி 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    #ICC Test Ranking #Harry brook #Joc Root

Comments


bottom of page