top of page

டம்மி' செல்போன்களால் உருவான கிறிஸ்துமஸ் குடில்- அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்

  • தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

  • செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 ‘டம்மி’ ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார்.

Cyber crime    Awarness      Christmas
Cyber crime Awarness Christmas

அரியாங்குப்பம்:

  • புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் உப்புக்கார வீதியை சேர்ந்தவர் சுந்தரராசு (வயது 52). இவர் மணவெளி தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஒவ்வொரு வருடமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.

  • கொரோனா காலத்தில் மருத்துவ பொருட்களை பயன்படுத்தி குடில் அமைத்திருந்தார். மேலும் 1 கன செ.மீ. அளவில் கிறிஸ்துமஸ் குடில் செய்து அசிஸ்ட் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.

  • இந்தநிலையில் தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்போன்களால் குடில் அமைக்க ஆசிரியர் சுந்தரராசு முடிவு செய்தார். இதற்காக செல்போன் கடைகளில் வைத்திருந்த 500 'டம்மி' ஸ்மார்ட் செல்போன்களை சேகரித்தார். அவற்றை பயன்படுத்தி தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளார்.

  • இதில் ஏசு கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் பொம்மைகளும் வைக்கப்பட்டுள்ளன. சைபர் குற்றத்திற்கு முக்கிய காரணமான பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் மற்றும் இ-மெயில் போன்ற வலைதளங்களின் முகப்பு பக்கங்களை கொண்ட டம்மி செல்போன்களால் குடில் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

  • இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வியந்து வருகின்றனர்.

Comments


bottom of page