தாமதமான கிரெடிட் கார்டு கட்டணங்களுக்கு 30% வட்டி விகித வரம்பு நீக்கம்.. ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என NCDRC தெரிவித்தது.
வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உச்சநீதிமன்றம் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது.

தாமதமாக கிரெடிட் கார்டு கட்டண பரிவர்த்தனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட 30% வட்டி விகித வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி உள்ளது. தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் (NCDRC) கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த 30% வட்டி விகித வரம்பை நிர்ணயித்துத் தீர்ப்பளித்திருந்த நிலையில் அதை எதிர்த்து வங்கிகள் தொடர்ந்த வழக்குகள் வெகு காலமாக நடைபெற்று வந்தது.
வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது அதிக வட்டியைச் சுமத்தும் நடைமுறை நியாயமற்றது என்று கூறி NCDRC 30% க்கு மேல் வட்டி கூடாது என்ற வட்டி வரம்பை நிர்ணயித்தது. இந்த நிலையில் அந்த வரம்பை நீக்கி உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் பேலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி, சிட்டி வங்கி, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்ப்பரேஷன் (எச்எஸ்பிசி) உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து வந்த நிலையில் NCDRC தீர்ப்பை ரத்து செய்தது. அதன்படி இனிமேல் வங்கிகள் தாமதமாக கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்துவோர் மீது 30 சதவீதத்துக்கு மேலும் தாங்கள் விரும்பியபடி வட்டியை சுமத்தலாம்.
#Credit card #Consumer #Bank #Interest rate #Supreme court #Tamilpublicnews






Comments