தொழில்நுட்ப கோளாறு.. 18 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரெயில்
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
குறுகிய காலக்கட்டத்திலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை நகரில் மெட்ரோ ரெயில்கள் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாக மெட்ரோ ரெயில் சேவை குறுகிய கால இடைவெளியில் இயக்கப்படும். விடுமுறை நாட்களில் கூட ஓரளவுக்கு குறுகிய கால இடைவெளியிலேயே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையிலான மெட்ரோ ரெயில் சேவை வழக்கத்திற்கு மாறாக 18 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சென்னை விமான நிலையம் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையிலான ரெயில் சேவை 7 நிமிட இடைவெளியிலும், சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை இடையே 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
#Metro train #Chennai metro #Tamilpublicnews
Comments