top of page

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • வெள்ளி விலை இன்றும் குறைந்துள்ளது.

  • பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today gold price
Today gold price

சென்னை:

  • தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கடந்த 8-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து, 13, 14-ந்தேதிகளில் சற்று சரிந்தது.

  • அதனைத்தொடர்ந்து 15 மற்றும் 16-ந்தேதிகளில் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், கடந்த 17-ந்தேதி கொஞ்சம் அதிகரித்து, நேற்று முன்தினம் மீண்டும் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை இறங்குமுகத்தில் காணப்பட்டது.

  • இந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,320-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7,040-க்கும் விற்பனையாகிறது. 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • வெள்ளி விலை இன்று இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments


bottom of page