தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு
- tamil public
- Dec 2, 2024
- 1 min read
வெள்ளி விலையில் மாற்றமில்லை.
ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

சென்னை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்தும் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தும் நேற்று மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 7,090-க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ. 56,720-க்கும்விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும் , ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
#Today Gold Price
Comments