தமிழக மீனவர்கள் 18 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
- tamil public
- Dec 3, 2024
- 1 min read
2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 தமிழக மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Fishermen Of Tamilnadu #Srilanka Navy
Comments