top of page

நீர்மட்டம் 119.53 அடியாக உயர்வு- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

  • நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

  • தற்போது அணையில் 92.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Mettur dam
Mettur dam

சேலம்:

  • மேட்டூர் அணை மூலம் ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும், பாசனத்துக்கும் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நீர்வரத்து அதிகரித்து இந்த ஆண்டில் அணை 2 முறை நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது.

  • தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

  • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 1960 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 2 ஆயிரத்து 331 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 92.72 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Comments


bottom of page