நாளை உருவாகிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி- வரும் 17, 18ம் தேதிகளில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம்
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, இதுவரை நாட்களில் பெய்த பருவ மழை குறித்தும், இனி மேல் பெய்யும் மழை குறித்தும் அவர் விவரித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு பகுதியில் நிலவுகிறது.
நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.
பருவமழை நேற்று வழக்கத்தை விட 14 சதவீதம் அதிகமாக இருந்தது. இன்று 32 சதவீதமாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 54 செ.மீ. பெய்துள்ளது.
வரும் 17,18ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது
#Chennai heavy rain #Meteorological department
Comments