நாளை மகாபெரியவா முக்தி தினம் காஞ்சிபுரம் அதிஷ்டானத்தில் சிறப்பு ஆராதனை
- tamil public
- Dec 26, 2024
- 1 min read
31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த மகாபெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கி முதல் நாள் நிகழ்ச்சியாக சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலைப் பாடத்தைத் தொடர்ந்து 40 நாட்களாக அதிஷ்டானத்தில் பாஸ்கர கன பாடிகள் என்பவரால் பாடப்பட்டு வந்தது.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நாளை ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெறும். மகா பூரணா ஹுதி தீபாராதனைக்கு பிறகு, மகா பெரியவா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கணபதி சேது லாரா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை, மாலை மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நடைபெறுகிறது.
#Mahaperiyava salvation day #Special workship #Tamilpublicnews






Comments