நடுவானில் துடைப்பத்தில் பறந்த இளம்பெண்- வீடியோ வைரல்
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார்.
வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிரபல கார்ட்டூன் தொடர்கள், ஹாலிவுட் படங்களில் சூனியக்காரிகளாக வருபவர்கள் மந்திர சக்திகளை கொண்டு நீண்ட துடைப்பத்தில் வானில் பறப்பதுபோலான காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதை பார்ப்பவர்களுக்கு நாமும் இதேபோல வானில் பறந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும். இதனை இளம்பெண் ஒருவர் சாத்தியப்படுத்தி உள்ளார்.
சீனாவை சேர்ந்தவர் வான்டி வாங். வானில் பறந்து சாகசத்தில் ஈடுபடும் 'பாரா கிளைடிங்'கில் தேர்ச்சி பெற்றவராக விளங்குகிறார். சாகசத்தில் ஈடுபடுவது தொடர்பான வீடியோக்களை வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமாகவும் உள்ளார்.
இந்தநிலையில் பனி மலை ஒன்றிற்கு அவர் சூனியக்காரிபோல வேடமணிந்து சென்றார். பின்னர் தன்னுடைய உடலில் பாராசூட் ஒன்றை பொருந்தி கொண்டு துடைப்பத்தில் ஏறி வானில் பறக்க தொடங்கினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
#Social media #Tamilpublicnews






Comments