நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்வாரா பும்ரா?
- tamil public
- Dec 6, 2024
- 1 min read
நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐ.சி.சி அறிவித்தது.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா இடம் பிடித்துள்ளார்.

துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.
அதன்படி, நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூப், தென் ஆப்பிரிக்க ஆல் ரவுண்டர் மார்கோ ஜான்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது பெற்றவர் பும்ரா என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நாடின் டி கிளர்க், இங்கிலாந்து வீராங்கனை டேனி வியாட்-ஹாட்ஜ், வங்கதேசத்தை சேர்ந்த ஷர்மின் அக்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
#ICC #player OF The Month #Jaisspirt Bumrah






Comments