நவம்பர் மாதத்தில் 83.61 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்
- tamil public
- Dec 3, 2024
- 1 min read
அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை:
மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர்.
அதிகபட்சமாக 6.11.2024 அன்று 3,35,189 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, நவம்பர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 27,50,030 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 599 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,208 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 35,62,463 பயணிகள் (Online QR 1,57,016; Paper QR 18,40,921; Static QR 2,24,276; Whatsapp - 5,40,257; Paytm 3,90,030; PhonePe – 2,99,396; ONDC – 1,10,567),சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,42,192 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம்.
#Chennai Metro Train
Comments