பூக்கள் விலை கடும் உயர்வு- மல்லி கிலோ ரூ.2500-க்கு விற்பனை
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.
மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.

போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வழக்கமாக ஓசூர், சேலம், ஆந்திரா மாநிலம் கடப்பா, வேலூர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 45-க்கும் அதிகமான வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வரும்.
ஆனால் பரவலாக பெய்த மழை மற்றும் பனி காரணமாக தற்போது 30-க்கும் குறைவான வாகனங்களில் மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு பூக்கள் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக மல்லி, சாக்லேட் ரோஸ் உள்ளிட்ட பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக சாமந்தி, ரோஜா, மல்லி ஆகிய பூக்களின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. வரத்து குறைவால் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.2500 வரை விற்கப்படுகிறது.
இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற சாமந்தி பூ தற்போது ரூ.160-க்கும், கிலோ ரூ.160-க்கு விற்ற சாக்லேட் ரோஸ் ரூ.240-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்ற பன்னீர் ரோஸ் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
#Koyambedu market #Flowers price rise #Tamilpublicnews






Comments