பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
- tamil public
- Jan 9
- 1 min read
இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
தினந்தோறும் 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.

சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2.21 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்துடன் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மேயர் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.
ஒரு கிலோ பச்சரிசி, சர்ச்சரை, முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கனில் உள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் காலை, மாலை என தலா 100 பேருக்கு பொங்கல் பரிசு விநியோகிக்கப்படும்.
#Pongal #MK Stalin #Tamilpublicnews
Comments