பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ
- tamil public
- Dec 18, 2024
- 1 min read
வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சேலம்:
சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பூட்டப்பட்ட கோவில் ஒன்றை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பெண்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள எவனுமே இல்லையா?" என அநாகரிகமாகப் பேசி இருக்கிறார்.
அவர் தொடர்ந்து அநாகரிகமாக பேசுவதை கேட்டு பெண்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






Comments