top of page

புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் நள்ளிரவில் சாலை மறியல்

  • பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. மனைவி மீது தாக்குதலை கண்டித்து மறியல்.

  • தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

Road blockade     BJP
Road blockade BJP

புதுச்சேரி:

  • புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர்.

  • அதை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசோக்பாபு தலைமையில் அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

  • போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

  • இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

  • இதையறிந்து ஆத்திரமடைந்த முதலியார் பேட்டை, தி.மு.க. எம்.எல்.ஏ. சம்பத்தின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், நள்ளிரவு 12 மணியளவில், முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து எப்படி வழக்குப்பதிவு செய்யலாம் என ஆக்ரோஷத்தோடு இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசாரை தள்ளி தாக்க முயற்சி செய்தனர்.

  • இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேற்றினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Comments


bottom of page