புதுச்சேரியில் மீட்பு பணியில் களம் இறங்கிய இந்திய ராணுவம்
- tamil public
- Dec 2, 2024
- 1 min read
புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

புதுச்சேரி:
புதுச்சேரியில் புயல் காரணமாக நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நகரே வெள்ளக்காடாக மாறி உள்ளது. இதையடுத்து புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை காரிசன் பட்டாலியன் இந்திய ராணுவ படையினர் இன்று புதுச்சேரி வந்தனர்.
மேஜர் அஜய் சங்வான் தலைமையில்ஆறு ஜூனியர் அதிகாரிகள் மற்றும் 62 இதர ரேங்குகளை உள்ளடக்கிய பேரிடர் நிவாரண ராணுவ குழுவினர் புதுச்சேரியில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சுமார் 5 அடி வரை தண்ணீர் இருப்பதால் அந்த பகுதியில் தற்போது மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். சுமார் 100 பேர் வரை மீட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவித்தனர்
#Fenjal # Rain






Comments