புதிய விமான நிலையத்திற்கு ஏதிரான போராட்டம் நீடிப்பு- அமித்ஷாவுக்கு எதிராக கோஷம்
- tamil public
- Dec 22, 2024
- 1 min read
நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 880 நாளாக நடைபெற்றது.
அப்போது அம்பேத்கார் குறித்து அமித்ஷா கூறிய கருத்தை கண்டித்து கிராம மக்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அங்குள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களது போராட்டம் இன்று 881-வது நாளாக நீடித்து வருகிறது.
#Parantur airport #Tamilpublicnews






Comments