top of page

புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்- மு.க.ஸ்டாலின்

  • சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

  • மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்

Fenjal Rain MK Stalin
Fenjal Rain MK Stalin
  • சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் புயல், மழை வெள்ள பாதிப்பு பணிகள் குறித்து அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

  • அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், சேகர்பாபு, உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

  • அதிகளவில் மழை பெய்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பாதிப்பு குறித்து கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

  • முதலமைச்சருடன் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி, சிவசங்கர் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

  • ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  • சென்னையில் 32 நிவாரண முகாம்களில் 1,018 பேர் தங்க வைக்கப்பட்டு அனைத்து தேவையும் செய்து கொடுக்கப்பட்டன.

  • *சென்னையில் 9 லட்சத்து 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

  • *புயல் கரையை கடந்த நிலையில் மழை வெள்ள மீட்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

  • வரலாறு காணாத மழையால் விழுப்புரம் மீட்பு பணியில் அமைச்சர் பொன்முடியுடன் செந்தில் பாலாஜி, சிவசங்கர் இணைந்துள்ளனர்.

  • மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  • புயல், மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தவற்காக மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும்.

  • *மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்ட பின்பு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.

  • புயல் மற்றும் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர் பாதிப்பு குறித்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று கூறினார்.

    #Fenjal #Rain #MK Stalin

Comments


bottom of page