புரோ கபடி லீக் மும்பையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாட்னா பைரேட்ஸ்
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
இதில் பாட்னா பைரேட்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

புனே:
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது. புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்தது.
இதற்கிடையே, பிளே ஆப் ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. முதல் பிளே ஆப் ஆட்டத்தில் உபி யோதாஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ், யு மும்பா அணிகள் மோதின. இதில் சிறப்பாக ஆடிய பாட்னா அணி 31-23 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உபி யோதாஸ் அணிகளும், 2வது அரையிறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி, பாட்னா பைரேட்ஸ் அணிகளும் மோத உள்ளன.
#PKL #U mumba #Tamilpublicnews
Komentarze