பெரியாரின் கைத்தடியை பரிசாக பெற்றது பெரும் பேறு- மு.க.ஸ்டாலின்
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.
90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.

சென்னை பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'பெரியார் கைத்தடி' போன்ற நினைவு பரிசை திராவிட கழகத் தலைவர் வீரமணி வழங்கினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பெரியாரின் கைத்தடியை பரிசாக பெற்றது பெரும் பேறு.
* திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்வோருக்கு இந்த கைத்தடி ஒன்றே போதுமானது.
* பெரியார் திடலுக்கு வந்தது எனது தாய் வீட்டிற்கு வந்ததை போன்றது.
* ஒற்றுமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் அயராது போராடியவர் தந்தை பெரியார்.
* பேச, எழுத, பத்திரிகை, போராட்டத்திற்கு தடை, கோவிலுக்குள் செல்ல தடை என அத்தனை தடைகளை உடைத்தவர் பெரியார்.
* தமிழினம் சுயமரியாதை பெறுவதற்கு வாழ்நாளெல்லாம் உழைத்தவர் பெரியார்.
* 90 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார் ஆசிரியர் வீரமணி.
* ஆசிரியர் வீரமணி இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருந்து எங்களை போன்ற இளைஞர்களுக்கு ஊக்கம் தர வேண்டும்.
* ஆசிரியர் வீரமணியை பெரியாரின் தொண்டனாக வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
#MK Stalin #Thanthai periyar #Tamilpublicnews






Comments