பெரியார் பகுத்தறிவு எணினி நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்
- tamil public
- Dec 24, 2024
- 1 min read
அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 51-வது நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் திடலில் பெரியார் பகுத்தறிவு எணினி (டிஜிட்டல்) நூலகம் மற்றும் ஆய்வு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
#MK Stalin #Thanthai periyar #Tamilpublicnews






Comments