top of page

பட்டாசு ஆலை வெடி விபத்து- முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

  • பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Firecracker factory explosion    MK Stalin
Firecracker factory explosion MK Stalin
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த சாய்நாத் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

  • இந்த வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசிபாலன், மேலாளர் தாஸ், போர்மேன் பிரகாஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,

  • வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    #Firecracker factory explosion #MK Stalin #Tamilpublicnews

Comments


bottom of page