பலத்த காற்றுடன் மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு
- tamil public
- Dec 11, 2024
- 1 min read
டெல்லி-சென்னை விமானம் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.
7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன.

ஆலந்தூர்:
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையடுத்து இன்று காலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது.
பலத்த காற்றுடன் மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 7 விமானங்கள் நீண்டநேரம் வானில் வட்டமடித்தபடி பறந்தன. பின்னர் வானிலை ஓரளவு சீரானதும் பத்திரமாக தரையிறங்கியது.
இந்தநிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு 152 பயணிகளுடன் விமானம் வந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டியதால் விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் வானிலை சீரடைந்த பின்னர்விமானம் திரும்பி வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் காலை 10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து விட்டு, மீண்டும் காலை 10:45 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப் பட்டு செல்லும் மற்றொரு விமானமும் மோசமான வானிலை காரணமாக பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் சென்னையில் இருந்து டெல்லிக்கு 10.45 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய அந்த விமானம், இன்று பகல் ஒரு மணிக்கு மேல் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லிக்கு செல்ல இருந்த 148 பயணி கள் சென்னை விமான நிலையத்தில் தவித்தனர்.
இதைப்போல் மங்களூ ரில் இருந்து இன்று காலை 10.40 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மோசமான வானிலை காரணமாக, இன்று காலை 11:40 மணிக்கு சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
Comments