top of page

மாடுகளை தேடி சென்று காட்டுக்குள் சிக்கி தவித்த 3 பெண்கள் வனத்துறையினர் மீட்பு

  • வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர்.

  • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்

Kothamangalam  Forest Department Rescue
Kothamangalam Forest Department Rescue
  • திருவனந்தபுரம்:

  • கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் பாருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர்கள் தினமும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

  • அதேபோல் நேற்றும் அவர்கள் சென்றனர். வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். அப்போது அவர்களது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து தங்களின் மாடுகளை தேடி 3 பேரும் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

  • ஆனால் காட்டுக்குள் சென்ற 3 பேரும் மாலை 4 மணியாகியும் திரும்பி வரவில்லை. அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். மதியம் ஒரு மணியளவில் மாயாவிடம் அவரது கணவர் செல்போனில் பேசியிருக்கிறார்.

  • அதன்பிறகு அவரது செல்போன் கிடைக்க வில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற 3 பெண்களும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத் தினர் பரிதவித்தனர்.

  • இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காணாமல் போன 3 பெண்களை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் உடனடயாக தொடங்கினர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

  • மாலை தொடங்கிய தேடுதல் பணி இரவிலும் நீடித்தது. ஆனால் 3 பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை விடவில்லை.அப்போது காட்டுக்குள் சிக்கிய 3 பெண்களும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

  • அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுவிட்டனர். திரும்பி வர வழி தெரியாமல் தவித்த அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து மீட்டனர்.

  • மீட்கப்பட்ட பெண்கள் இன்று காலை வரை வனப்பகுதியில் இருந்தனர். அவர்களை வனத்துறையினர் இன்றுகாலை விடிந்தபிறகு காட்டில் இருந்து வெளியே அழைத்தது வந்தனர். பெண்களை மீட்டு வந்த குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

  • வனப்பகுதியில் சிக்கிய பெண்களை இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்டு மீட்ட வனத் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    #Kothamangalam#Forest Department Rescue


    .

Comments


bottom of page