top of page

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

  • தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது.

  • அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது.

Mettur dam
Mettur dam

மேட்டூர்:

  • காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி விநாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை நீடித்ததால் டிசம்பர் 21-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நீர் திறப்பை விட வரத்து அதிகமாக இருந்ததால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு கடந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.

  • தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாததால், பாசனத்திற்கு நீர் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நிரம்பி இருந்த அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியிலிருந்து இன்று காலை 119.14 அடியாக குறைந்தது.

  • அணைக்கு வரும் நீரின் அளவு 1,992 கன அடியில் 1128 கன அடியாக சரிந்து உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 12,000 கன அடியும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 92.10 டி.எம்.சியாக உள்ளது.

Comments


bottom of page