top of page

மீண்டும் இரட்டை சதம் விளாசிய முன்னாள் சிஎஸ்கே வீரர்- வைரல் வீடியோ

  • கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய்க்கு எடுத்தது.

  • 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

CSK    IPL auction
CSK IPL auction
  • இந்தியாவில் தற்போது 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி என்பதால் இது ஒரு அங்கீகரிக்கப்படாத போட்டியாகவே அமைகிறது.

  • இந்நிலையில் நேற்று விதர்பா - உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்தது.

  • இதனையடுத்து உத்தர பிரதேசம் அணி களமிறங்கி விளையாடியது. அதிரடியாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் 2-வது முறையாக இரட்டை சதம் விளாசினார். அவர் 95 பந்தில் 202 ரன்கள் குவித்தார். இதனால் உத்தர பிரதேசம் அணி 41.2 ஓவரில் 409 ரன்கள் குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • இந்த தொடரில் இவர் அடிக்கும் 4 சதம் இதுவாகும். 6 போட்டிகளில் 728 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் ரிஸ்வி உள்ளார்.

  • சமீபத்தில் தான் திரிபுரா அணிக்கு எதிராக 97 பந்தில் 201 ரன்கள் ரிஸ்வி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி 8.40 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது. 

  • ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பெரிய அளவில் சொபிக்கவில்லை. இதனால் இந்த முறை சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்க முயற்சி செய்யவில்லை. டெல்லி இவரை வெறும் ரூ. 95 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளது.

    #CSK #IPL auction #Tamilpublicnews

Kommentare


bottom of page