மீண்டும் மீண்டும் மழை.. 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா திணறல்
- tamil public
- Dec 16, 2024
- 1 min read
கேஎல் ராகுல் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களை எடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பிரிஸ்பேன்:
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 28 ரன் எடுத்து இருந்த போது மழையால் போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 405 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
டிராவிஸ் ஹெட் (152 ரன்), ஸ்டீவ் சுமித் (101) ஆகியோர் சதம் அடித்தனர். அலெக்ஸ் கேரி 45 ரன்னும், ஸ்டார்க் 7 ரன்னும் எடுத்து எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 117.1 ஓவரில் 445 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது.
இந்திய தரப்பில் பும்ரா 76 ரன் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். முகமது சிராஜூவுக்கு 2 விக்கெட்டும், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டிக்கு தலா1 விக்கெட்டும் கிடைத்தது.
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் இந்தியா விக்கெட்டுகளை இழந்து திணறியது.
22 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் (4 ரன்), சுப்மன் கில் (1) ஆகியோர் ஸ்டார்க் பந்திலும், விராட் கோலி 3 ரன்னில் ஹசில்வுட் பந்திலும் அவுட் ஆனார்கள். அதோடு மழையால் ஆட்டம் சிறிது நேரம் 2-வது முறையாக பாதிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 4-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுலுடன் ரிஷப்பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்து இருந்த போது 3-வது முறையாக மழையால் பாதிப்பு ஏற்பட்டது. மழை விட்டதும் போட்டி தொடங்கியது.
மழைக்கு பின் தொடங்கிய முதல் ஓவரில் ரிஷப் பண்ட் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து ரோகித் சர்மா களமிறங்கினார். மீண்டும் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தற்போது வரை இந்திய அணி 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கேஎல் ராகுல் மட்டும் பொறுப்புடன் ஆடி வருகிறார். அவர் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்துள்ளார்.
#AUS VS IND #KL Rahul #Tamilpublicnews






Comments