முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் எழுத்தாளர் வேங்கடாசலபதி
- tamil public
- Dec 21, 2024
- 1 min read
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்

வரலாற்று ஆய்வாளரும் எழுத்தாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908" ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட ஆ.இரா. வேங்கடாசலபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் எழுத்தாளர் வேங்கடாசலபதி சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டதற்காக சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
#MK Stalin #Sahitiya akademi award #Tamilpublicnews
Comments