மெரினாவை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய மிதவை
- tamil public
- Nov 27, 2024
- 1 min read
Updated: Nov 28, 2024
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
flood தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இது அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக (ஃபெங்கல் புயல்) வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக எண்ணூர், திருவெற்றியூர், காசிமேடு ஆகிய பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலில் ஆழம் குறித்தும் பாறைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டி கண்டறிய பொறுத்தப்படும் மிதவை கருவி ஒன்று மெரினா கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. அதனை தொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டையிலும் ஒரு மிதவை கருவி கரை ஒதுங்கி உள்ளது.
இதனை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். மேலும் சில இளைஞர்கள் அந்த கருவியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
Comments