மூளைசாவு அடைந்த இலங்கை அகதியின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேர் பயனடைந்தனர்
- tamil public
- Jan 3
- 1 min read
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்ற போது பைக் விபத்து.
கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்கள் தானம்.

புதுச்சேரி:
புதுச்சேரி அருகே தமிழக பகுதியான கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜய குமார். இவரது மகன் பிரேம்குமார் (வயது19) இவர் கடந்த 31-ந் தேதி இரவு 10 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது கே.டி.எம். டியூக் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி இ.சி.ஆர். சாலையில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கியதில் பிரேம்குமார் நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அவரை அங்கி ருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மூலக்குளம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார்.
அதனால் அவரது உடல் உறுப்புகளான கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்த்து, 5 உறுப்புகளும் அந்த மருத்து வமனை டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கிட்னி அதே மருத்துவமனையில் பெறும் சிகிச்சை 47 வயது நபருக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு கிட்னி இந்திரா காந்தி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் 24 வயது பெண்ணிற்கு பொருத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டது.
கல்லீரல் கிருமாம்பாகம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 59 வயது ஆண் நபருக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப் பட்டது. இரு கண்கள் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டன.
இந்த உடல் உறுப்புகள் ஆம்புலன்சில் கொண்டு செல்லும் சிக்னல்கள் மற்றும் சாலைகளில் போலீசார் நிறுத்தப்பட்டு அதிவிரைவாக அந்தந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இறந்த வாலிபர் பிரேம்குமாரால், 7 பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#Pudhucherry # Sri lanka relugee #Organ donation #Tamilpublicnews






Comments