முழங்கால் அளவு தண்ணீரில் நடந்தபடி மழை பாதிப்பில்லை என்பது தான் திராவிட மாடலா? கனிமொழி எம்.பி.க்கு தமிழிசை கேள்வி
- tamil public
- Dec 16, 2024
- 1 min read
ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?
உங்கள் பார்வையில் மழை வெள்ள பாதிப்பின் அளவு கோல் என்ன? விளக்கினால் நல்லது.

சென்னை:
தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை என்று கூறும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களே ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?
முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பில்லை என்று மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடல் ஆட்சியா?
மழை வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்து கொண்டிருக்கும் போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே உங்கள் பார்வையில் மழை வெள்ள பாதிப்பின் அளவு கோல் என்ன? விளக்கினால் நல்லது.
Comments