மக்களவையில் கவனக்குறைவாக காங்கிரஸ் ஆளும் மாநில அரசை விமர்சித்த பிரியங்கா காந்தி
- tamil public
- Dec 13, 2024
- 1 min read
இன்று அனைத்து குளிரூட்டப்பட்ட ஸ்டோரேஜ்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேச ஆப்பிள் உற்பத்தியாளர்கள் அழுது கொண்டிருக்கிறாரக்ள்.

வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டார்.
கடந்த மாதம் 25-ந்தேதி மக்களவை தொடங்கினாலும் இன்றுதான் அவருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் கன்னிப் பேச்சிலேயே தவறுதலாக காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேச அரசை விமர்சித்துள்ளார்.
இன்று மக்களவையில பேசும்போது பிரியங்கா காந்தி கூறியதாவது:-
ஒரு நபருக்காக எல்லாம் மாற்றப்படுகிறது. இன்று அனைத்து குளிரூட்டப்பட்ட ஸ்டோரேஜ்கள் அதானிக்கு வழங்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச ஆப்பிள் உற்பத்தியாளர்கள் அழுது கொண்டிருக்கிறாரக்ள். ஏனென்றால் ஒரு மனிதருக்கான அனைத்தும் மாற்றப்படுகின்றன. ஒருவருக்கு சாதகமாக்கப்பட்டு, 142 கோடி இந்தியர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். ஒரு நபருக்கு அனைத்து தொழில்களும் கொடுக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்தும் கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இது அவரது சகோதரர் ராகுல் காந்தியைப் போலவே, அவரது விழிப்புணர்வு இல்லாமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என பா.ஜ.க. தலைவர் மாள்வியா விமர்சித்துள்ளார். மேலும், "இது எந்த உன்னத நோக்கத்தாலும் இயக்கப்படவில்லை - இது அவருடை விழிப்புணர்வு இல்லாததற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. அரசியல் சர்க்கஸ் இப்போதுதான் தொடங்கியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.






Comments