top of page

மகாராஷ்டிராவில் பரவும் மர்மநோய் ஓரே வாரத்தில் வழுக்கையான 50 பேர்

  • திடீரென முடி உதிரும் பாதிப்பு அதிகமாகி வழுக்கையாகி வருகின்றனர்.

  • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 பேருக்கு முடி உதிர்ந்துள்ளது

Mumbai    Baldness problem
Mumbai Baldness problem

மும்பை:

  • மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா ஆகிய கிராமங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

  • இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலருக்கும் திடீரென முடி உதிரும் பாதிப்பு அதிகமாகி கொத்து கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றனர்.

  • ஆண், பெண் பேரமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உச்சந்தலையில் சிறிது அரிப்பு, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல், பின்னர் 72 மணி நேரத்திற்குள் வழுக்கை என அவர்களது முடி தானாகவே உதிர்ந்து விழுவதாக கூறப்படுகிறது.

  • மேலும் தலைமுடியை கைகளால் லேசாக கோதினாலும் கூட அவை கையோடு வந்து விடுவதா வும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். 3 கிராமங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 பேர் வரை இந்த முடி உதிர்ந்துள்ளது அந்த கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • பாதிக்கப்பட்ட மக்கள் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்ற னர். முடி உதிர ஆரம்பித்து விட்டால் ஒரு வாரத்தில் தலை வழுக்கையாகி விடுவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  • தலை முடி மட்டுமல்லாது தாடியும் உதிர்ந்து வருவதாக ஆண்கள் கூறுகின்றனர். வாலிபர் ஒருவர் கூறுகை யில், கடந்த 10 நாட்களாக எனது தலைமுடி வேகமாக உதிர்ந்து விடுவதாக உணருகிறேன் என்றார்.

  • இந்த புதிய நோய் பரவலுக்கு காரணம் என்ன? என்று இதுவரை கண்டறியப்படவில்லை.

  • எனினும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று அங்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீரை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.

  • மேலும் முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்தால் தான் முடி உதிர்வுக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம மக்கள் தண்ணீரை சுட வைத்து பயன்படுத்தும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில், கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. தலை முடியை தொட்டால் கூட கையோடு வந்து விடுகிறது. இதனால் மக்களிடம் பீதி நிலவுகிறது என்றார்.

Comments


bottom of page