top of page

மகளிர் பிரீமியர் லீக் 2025 கடந்த முறை UNSOLD, இந்த முறை ரூ. 1.9 கோடிக்கு ஏலம்போன வீராங்கனை

  • மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஐந்து அணிகள் விளையாடி வருகின்றன.

  • மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்றது.

Womens premier league    WPL Auction
Womens premier league WPL Auction
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 17 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோன்று, மகளிருக்கான டி20 போட்டிகளை கடந்த ஆண்டு பி.சி.சி.ஐ. அறிமுகப்படுத்தியது. இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 5 அணிகள் விளையாடி வருகிறது.

  • முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், இரண்டாவது சீசனில் ஆர்சிபி அணியும் WPL கோப்பைகளை கைப்பற்றின. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.

  • இதில் மும்பை பேட்டர் சிம்ரன் ஷேக் மகளிர் பிரீமியர் லீக் 2025 ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2023 ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தின் போது உ.பி. வாரியர்ஸ் அணி இவரை ரூ. 10 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

  • இந்த நிலையில், 22 வயதான சிம்ரன் ஷேக்-ஐ குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. முன்னதாக 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து தான் 2025 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தில் இவர் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ஜாஹித் அலி வயர்மேன்-ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

#Womens premier league #WPL Auction #Tamilpublicnews


Comments


bottom of page