மத்திய தரைக்கடலில் மூழ்கிய ரஷிய சரக்கு கப்பல்: தாக்குதல் நடத்தப்பட்டதாக உரிமையாளர் குற்றச்சாட்டு
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
அதிக எடை கொண்ட கிரேனை கொண்டு சென்றபோது விபத்து.
16 பேரில் 14 பேர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் இருவரை காணவில்லை.

மத்திய தரைக்கடலில் பயணம் மேற்கொண்டபோது ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையில் ரஷிய உரிமையாளருக்கு சொந்தமான சரக்கு கப்பல் கவிழ்ந்து மூழ்கியது.
கப்பல் மூழ்கியதற்கு தாக்குதல்தான் காரணம் உள்ள கப்பல் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். கப்பலில் இரண்டு மூன்று இடங்களில் வெடிக்கும் சத்தம் கேட்டது. எஞ்ஜின் பக்கத்தில் சேதம் அடைந்தது. தொடர்ந்து கப்பலை இயக்க முடியாமல் புானதாக தெரிவித்துள்ளார்.
கப்பலில் இரண்டு அதிக எடை கொண்ட கிரேன் மற்றும் மற்ற பொருட்கள் இருந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து ரஷியாவின் கிழக்கு கடற்கரையில் மிக தொலைவில் உளள விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு கப்பல் சென்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்கள்ளான கப்பலில் 16 பணியாளர்கள் இருந்துள்ளனர். இவர்கள் லைஃப் ஜாக்கெட் மூலம் காயமின்றி உயிர்தப்பி ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர். இரண்டு பேரை காணவில்லை.






Comments