மழை எதிரொலி சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை
- tamil public
- Dec 12, 2024
- 1 min read
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

வத்திராயிருப்பு:
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரிசுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக நாளை முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்திருந்தனர்.
இதனிடையே தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.






Comments