ரேசன் கடைகளுக்கு வேட்டி, சேலைகளை ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு
- tamil public
- Dec 26, 2024
- 1 min read
2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்.
2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் 2025-ம் ஆண்டிற்காக 1 கோடியே77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளும், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகளையும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்தது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இலவச, வேட்டி சேலைகளை ஜனவரி.10-ந்தேதிக்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தி உள்ளது.
2.50 லட்சம் நெசவாளர்களிடம் இருந்து பெறப்பட்ட இலவச வேட்டி, சேலைகளை கிடங்கு மற்றும் ரேசன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2025 பொங்கல் பண்டிகைக்கு 1.75 கோடி சேலைகளும், ஏறத்தாழ 1.77 கோடி வேஷ்டிகளும் வழங்கப்பட உள்ளது.
#Pongal festival #Free dhoti sarees #Tamilpublicnews






Comments