ரேசன் கடையில் இருந்து மூட்டை, மூட்டையாக அரிசி-பொருட்கள் திருட்டு
- tamil public
- Dec 27, 2024
- 1 min read
காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள்.
ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரசி உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து ஆந்தி மாநிலத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. பஸ், ரெயில்களில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டைகளை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேசன் கடையில் இருந்து இரவு நேரத்தில் மூட்டை,மூட்டையா ரேசன் அரசி கடத்தப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் இரவு நேரத்தில் கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியே எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரவு நேரத்தில் ரேசன் கடை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அந்த ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் சரிவர வழங்குவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
#Ration shop #Ration rice #Tamilpublicnews






Comments