top of page

'ரீல்ஸ்' மோகத்தில் செல்போனை பறிகொடுத்த வாலிபர்

  • ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது.

  • நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது.

Reels     Social media      Viral video
Reels Social media Viral video
  • இணையத்தில் புகழ்பெறுவதற்காக இளைஞர்கள் வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் சாகசங்களை செய்து அவற்றை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சில வீடியோக்கள் சிரிப்பை ஏற்படுத்தும். சில வீடியோக்கள் ஆபத்தானதாக இருக்கும்.

  • அந்த வகையில், தற்போது ரீல்ஸ் மோகத்தில் நீர் நிலை அருகில் நின்று வீடியோ எடுத்த ஒரு வாலிபர் தனது செல்போனை பறிகொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு வாலிபர் நீர்நிலை ஓரம் தனது செல்போனை ஸ்டாண்டில் செட் செய்துவிட்டு பின்னர் சற்று தூரம் சென்று திரும்பி நடனம் ஆடுகிறார்.

  • அப்போது அவர் செல்போன் ஸ்டாண்டை கவனிக்கவில்லை. அந்த ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீருக்குள் விழுகிறது. அதோடு அவர் நடனம் ஆடும் போதே காலில் இருந்த செருப்பும் தண்ணீருக்குள் விழுந்து விடுகிறது. சிறிது நேரம் கழித்து தான் அவருக்கு செல்போன் தண்ணீருக்குள் விழுந்தது தெரிவதும், இதனால் அவர் அதிர்ச்சி அடைவது போன்ற காட்சிகளும் உள்ளது.

    #Reels #Social media #Viral video #Tamilpublicnews

Comments


bottom of page