top of page

லேட்டா வந்த ஜெய்ஸ்வால் காத்திருக்க முடியாதுனு கிளம்பிய இந்திய அணி

  • இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றனர்.

  • அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

AUS VS IND   Yashasvi Jaiswall   Rohit Sharma
AUS VS IND Yashasvi Jaiswall Rohit Sharma

பிரிஸ்பேன்:

  • இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

  • இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றனர்.

  • அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் விமானம் புறப்படும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் 8.30 மணிக்கே ஓட்டலில் இருந்து பஸ்சில் ஏறினர்.

  • ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மட்டும் தனது அறையை விட்டு வெளியேறவில்லை. அவர் வராததால் கோபமடைந்த ரோகித் சர்மா, பஸ்சில் இருந்து இறங்கி பாதுகாப்பு அலுவலரிடம் அவரை கண்டுபிடிக்க அறிவுறுத்தினார். சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, அனைவரும் பேருந்தில் அமர்ந்தனர். அவர் இல்லாமல் பஸ் விமான நிலையத்திற்கு சென்றது.

  • சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, யஷஸ்வி ஹோட்டல் லாபிக்கு வந்து பார்த்தார். அவர் இல்லாமல் பேருந்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அணி நிர்வாகம் அவருக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அணியின் மூத்த பாதுகாப்பு அதிகாரி யஷஸ்வியுடன் காரில் விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

  • பொதுவாக, நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்கும் யஷஸ்வி, இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார், ஆனால் சில தெரியப்படாத காரணங்களால், லாபியை சரியான நேரத்தில் அடைய முடியவில்லை. 

#AUS VS IND #Yashasvi Jaiswall #Rohit Sharma


Comments


bottom of page